இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்திலோ அல்லது வேற்று கிரகத்திலோ வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து UFOக்களும் கண்டறியப்பட்டுள்ளது.. ஆனால் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை யாரிடமும் இல்லை. எனவே ஏலியன் தொடர்பான மர்மங்கள் இன்றும் தொடர்கின்றன..

இந்நிலையில் யுஎஃப்ஒ மற்றும் ஏலியன் நிபுணர் கொலின் சாண்டர்ஸ், ஒரு வினோதமான கருத்தை தெரிவித்துள்ளார்.. மனிதர்களைப் போல தோற்றமளிக்கும் கலப்பின வேற்றுகிரகவாசிகளின் படையை உருவாக்குவதே ஏலியன்கள் குறிக்கோள் என்பதால், வேற்றுகிரகவாசிகள் இப்போது மனிதர்களின் இனப்பெருக்க அமைப்பில் ஈடுபடுகின்றனர் என்று கூறுகிறார். கலப்பின வேற்றுகிரகவாசிகளின் மூலம் பூமியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர்.
இந்த கலப்பினங்கள் உண்மையில் ஏற்கனவே நம்மிடையே இருக்கலாம். பூமியின் படிப்படியான அழிவுக்கு மனிதர்கள் காரணம், எனவே பூமியை அதன் தவிர்க்க முடியாத அழிவிலிருந்து காப்பாற்ற வேற்றுகிரகவாசிகள் பூமியைக் கைப்பற்ற விரும்புகிறார்கள்.
அவர்கள் நம்மைப் போலவே இருக்கிறார்கள், எனவே அவர்களைப் பிரிக்க வழி இல்லை. வேற்றுகிரகவாசிகள் கடத்தல் திட்டத்தை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.. இரவின் நடுவில் ஒரு ஏலியன் ஷிப்பில் ஆட்களை ஏற்றிச் சென்று கடத்திச் செல்கிறார்கள். பின்னர் ஒரு வகையான ஆய்வுக் கருவியைப் பயன்படுத்தி, அவர்கள் விந்தணுக்களையும் முட்டைகளையும் பிரித்தெடுக்கிறார்கள். ஏலியன்களால் கடத்தப்பட்டவர்களிடம் இருந்து நான் இந்தக் கதையை கேட்டேன்.. அவர்களில் எவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் அல்ல.. இந்த வேற்றுக்கிரக கலப்பினங்கள் ஏற்கனவே பூமியில் இருக்கின்றனர்.. அவர்கள் மனிதர்களுடன் இனப்பெருக்கம் செய்து, பூமியைக் கைப்பற்ற அவற்றின் மக்கள்தொகையை மேலும் அதிகரித்து வருகின்றனர்..
இதே போல் கடந்த 20 ஆண்டுகளாக இதை ஆராய்ந்து வரும் யுஎஃப்ஒ நிபுணரான புல்மேயின் என்பவரும், வேற்றுகிரகவாசிகள் ஏற்கனவே பூமியில் இருக்கிறார்கள் மற்றும் மனிதர்களுடன் இணைந்து வாழ்கிறார்கள் என்றும் வழக்கமான வேலைகளை செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்…