fbpx

லண்டனில் கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் மாணவி…..! இருவர் அதிரடி கைது…..!

ஹைதராபாத்தைச் சேர்ந்த கொந்தம் தேஜஸ்வினி (27) என்ற பெண் லண்டன் வெம்பிளியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். மேற்படிப்புக்காக லண்டன் சென்றிருந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் குடியிருப்பு வளாகத்தில் பிரேசிலியாவை சேர்ந்த ஒரு நபரால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெம்ப்லியில் உள்ள நீல்டு கிரசென்ட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தேஜஸ்வினியின் உறவினர் ஒருவர் தேஜஸ்வினி தன்னுடைய நண்பருடன் வசித்து வந்ததாக பகிரப்பட்ட தங்குமிடத்தில் ஒரு வாரத்திற்கு முன்னால் குடி பெயர்ந்ததாகவும் தெரிவித்தார். சென்ற வருடம் மார்ச் மாதம் தேஜஸ்வினி முதுகலை பட்டம் பெறுவதற்கு லண்டன் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில், 24 வயது பெண் மற்றும் 23 வயது ஆண் ஆகிய இருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அந்த நபர் தொடர்ச்சியாக காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அதோடு, எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் அந்த பெண் விடுவிக்கப்பட்டிருக்கிறார். என ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்றொரு சந்தேக நபரான 23 வயது இளைஞனும் தற்சமயம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் இதற்கு முன்னர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த கெவன் ஆண்டோனியோ லோரென்கோ டி மொரைசிங் படத்தை வெளியிட்டது என்று சொல்லப்படுகிறது. அதோடு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடியதாகவும் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் லண்டனில் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் ...! 3 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் பயனாளிகள்..! மத்திய அரசு தகவல்..‌!

Thu Jun 15 , 2023
பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம் என்பது நூறு சதவீதம் அளவிற்கு நிதியுதவி அளிக்கும் மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்படுவது அவர்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பை அளிக்கிறது. இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 2.42 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொவிட் பெருந்தொற்றின் போது அமலில் இருந்த ஊரடங்கு காலத்தில் […]

You May Like