ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றபோது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தின் ஹகிம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் முகமது முஜாகித் (37) . இவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் துக்கு வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் அவரது உடல் பிணமாக கண்டெடுக்கபபட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்கள் அவரை அடையாளம் கண்டு உடலை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் , அவரை சோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவர் தமாம் என்ற இடத்தில் ஏற்கனவே பணியாற்றி வந்துள்ளார். பின்னர் புது வேலை கிடைக்கவே ரியாத் நகருக்கு வந்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை வேலையில் சேர வேண்டும். ஆனால் இன்றே சேர்ந்துவிடலாம் என நினைத்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
இவரது குடும்பத்தினரும் சவுதியிலேயே இவருடன் இருந்துள்ளார்கள். அப்துல் என்பவர் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்து அங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.