fbpx

அந்த ப்ளாட்டில் எனக்கும் பங்கு உண்டு.. நாக சைதன்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய சமந்தா..!!

நடிகை சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களில் அவர்கள் தங்களது பிரிவை அறிவித்தனர். சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஹைதராபாத்தில் சிம்பிளாக நடந்து முடிந்தது. திருமணமும் விரைவில் நடக்கவிருக்கிறது. அதேசமயம் சமந்தாவும் விரைவில் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவரது ரசிகர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் இரண்டாவது திருமணத்தில் தனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் உரையாடலில் சமந்தா தெளிவுப்படுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காதலர்களாக இருந்த சமயத்தில், நாக சைதன்யாவும், சமந்தாவும் திருமணத்திற்கு முன்பு ஒரு பிளாட் ஒன்றை வாங்கினார்கள். அவர்கள் விரும்பியபடி அந்த வீட்டினை வடிவமைத்து உருவாக்கினர். உண்மையில் அது அவர்களது கனவு வீடாகவே இருந்தது என்றே கூறலாம்.

ஆனால் இந்த பிளாட் வாங்கும் போது, நாக சைதன்யாவை விட சமந்தா தான் அதிகம் செலவு செய்ததாக சில இடங்களில் அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து, அதன் பிறகு நாக சைதன்யாவுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.

சோபிதாவுடனான திருமணத்திற்கு பிறகு, அந்த பிளாட்டில் தான் குடியேற இருப்பதாக நாக சைதன்யா கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முடிவிற்கு ஷோபிதா சம்மதிக்கவில்லை என்றும். அதில் தங்குவதன் மூலம், முன்னாள் மனைவியின் நினைவுகளை திரும்பத் திரும்ப வரும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அந்த பிளாட்டில் யாரும் இல்லை என்றும், அதை விரைவில் சோபிதாவிற்கு, சைதன்யா பரிசளிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் சமந்தா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதால் இதில் விரைவில் பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more ; சனாதனத்தை பாதுகாக்க புதிய அணியை தொடங்குவதாக பவன் கல்யாண் அறிவிப்பு…!

English Summary

I also have a share in that plot.. Samantha sent notice to Naga Chaitanya.

Next Post

பட்டா சிட்டா ஆவணங்கள் எதற்காக பயன்படுகிறது? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Sun Nov 3 , 2024
What are Patta Chitta documents used for? How to apply online?

You May Like