என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்; இந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவதே முக்கியம் என்று தோனி கூறியுள்ளதால், இது ஓய்வு பெறுவதன் அறிகுறியா என ரசிகர்கள் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் உள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், சென்னை அணியின் சூழலில் விக்கட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஐதராபாத் அணி. எனவே, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ், கான்வே சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் ஒரு சில விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் கான்வே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரை காலத்தில் நின்று வெற்றியை தேடி தந்தார்.
சென்னை அணி 18.4 ஓவரில் 138 ரன்கள் அடித்து 7 விக்கெட்டு வித்தியாசத்தில் 4வது வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் டெவோன் கான்வே சிறப்பாக விளையாடி 57 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தார்.ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, என்னுடைய கிரிக்கெட் கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன் என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். மேலும், இந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவதே முக்கியம். சேப்பாக்கத்தில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை ரசிகர்கள் எனக்கு நிறைய அன்பை கொடுத்திருக்கிறார்கள். இப்பொது கூட நான் பேசுவதை கேட்க நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், வயதாகும்போது தான் அனுபவம் வரும். சச்சின் டெண்டுல்கர் 16, 17 வயதிலேயே விளையாட தொடங்கிவிட்டதால், அவருக்கு மட்டும் இளம் வயதிலேயே அனுபவம் வந்துவிட்டது. எனக்கு வயதாகிவிட்டது, அதை மறைக்க முடியாது என தொடர்ந்து அதிவேகமாக ஸ்டெம்பிங் செய்து வருகிறீர்கள் என கிரிக்கெட் வர்ணனையாளர் கூறியதற்கு தோனி பதில் அளித்தார். மேலும், மேலும், இன்று நான் பிடித்த கீப்பிங் கேட்ச், சிறந்தது என நினைக்கிறன். ஆனால், அதற்காக எனக்கு விருது தரவில்லை, கையுறை அணிந்திருப்பதால் கேட்ச் பிடிப்பது சுலபம் என்று நினைக்கிறார்கள் என தோனி கிண்டலாக பேசினார்.