fbpx

பிரதமர் நரேந்திர மோடி அவர்களே..!! பழிவாங்குவதில் மட்டும் குறியாக இருக்க வேண்டாம்..!! – முதலமைச்சர் ஸ்டாலின்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு கலவையான வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு எந்த வித புதிய திட்டங்களையும் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

பிரதமர்  நரேந்திர மோடி அவர்களே, ‘தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!. அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Read more ; நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும், பாடவும் மட்டும் தான் தெரியும்..!! – பாஜக மூத்த தலைவர் விமர்சனம்

English Summary

I am obliged to advise you that if you run the government according to your political likes and dislikes, you will be isolated,” said Chief Minister Stalin to Prime Minister Modi.

Next Post

மாரடைப்பு வராமல் தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க..!! இதயத்தை ஆரோக்கியமா வெச்சிக்கோங்க..!!

Wed Jul 24 , 2024
We can protect our health through healthy lifestyle changes and appropriate medical treatments.

You May Like