fbpx

மீண்டும் சொல்ற… நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை…! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நான் ஒரு கிறிஸ்டியன் என்று சொல்வதில் பெருமையடைகிறேன் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் எஸ்.பி.சி பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பெத்தேல் மாநகரப் பேராலயத்தில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டு பேசியதாவது; ஒட்டுமொத்த உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விழா என்றால், அது நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டும் தான். கிறிஸ்துமஸ் வந்தால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. உங்களுக்கு தெரியும், நான் படிச்சது டான் பாஸ்கோ பள்ளியில், மேல்படிப்பு படிச்சது லயோலா கல்லூரியில்.

சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘நானும் ஒரு கிறிஸ்டியன் தான்’ என்று பெருமையாக சொன்னேன். உடனே பல சங்கிகளுக்கு வயிற்று எரிச்சல். இன்னைக்கு மீண்டும் உங்க முன்னால் சொல்றேன், நான் ஒரு கிறிஸ்டியன் என்று சொல்வதில் பெருமையடைகிறேன். ‘நீங்க என்ன கிறிஸ்தவனு நினைச்சா கிறிஸ்தவன், முஸ்லீம்னு நினைச்சா முஸ்லீம் , இந்து என்று நினைச்சா இந்து; நான் எல்லாருக்கும் பொதுவானவன் தான். எல்லா மதங்களின் அடிப்படையே அன்பு தான். எல்லோர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்று தான் எல்லா மதங்களும் சொல்கின்றன என்றார்.

English Summary

I am proud to say that I am a Christian…! Deputy Chief Minister Udhayanidhi Stalin

Vignesh

Next Post

மகிழ்ச்சி...! தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் எல்பிஜி எரிவாயுவை விநியோகம் செய்ய அனுமதி...!

Thu Dec 19 , 2024
Primary Agricultural Credit Societies allowed to distribute LPG gas

You May Like