கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தமிழ்நாட்டை விளையாட்டுக்கான தலைநகராக்கும் வகையில் அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஹாக்கி வீரர்களின் கோரிக்கையை ஏற்று கோவையில் சர்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவையின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் 200 கோடி ரூபாயை அறிவித்துள்ளார். ஏற்கனவே முதல்வர் சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அறிவித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகளும் துவங்கப்படும். கடந்த ஆட்சியில் சாலைகள் போடப்படாமல் விட்டதால், இப்போது சாலை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். அதற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், விஜய்யின் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்ன ஒரு வாக்கு வாங்கி இருக்கிறது என்று தெரியாத சூழல் உள்ளது. யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. குறைவாக சொல்லவில்லை. அரசியல் சார்ந்த கேள்விகளை அரசியல் நிகழ்ச்சிகளில் கேளுங்கள்” என்று தெரிவித்தார்.
Read More : அடேங்கப்பா..!! இன்டர்நெட், சார்ஜிங் செய்ய தேவையில்லை..!! எலான் மஸ்க் தயாரிக்கும் புதிய செல்போன்..!!