fbpx

’இப்போதான் மனசுக்கு இதமா இருக்கு’..!! ஓடிவந்த நபரை ஓங்கி அறைந்த போலீஸ்..!! பரபரப்பு காட்சி..!!

ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் செல்வது அல்லது நடைமேடை முனையை ஒட்டியது போலவே செல்வது என பலரும் ஆபத்தான முறையில் ரயில் நிலையங்களை பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

தண்டவாளங்களில், நடைமேடைகளில் மற்றும் ரயிலுக்குள் பயணிப்பது குறித்து பல வகையான விழிப்புணர்வுகளை மேற்கொண்டாலும் ஒரு சிலர் வேண்டுமென்றே செல்லும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையிலான ஒரு வீடியோதான் ட்விட்டரில் பகிரப்பட்டு பலரையும் கோபமடையச் செய்திருக்கிறது. அந்த வீடியோவில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளம் வழியாக நடைமேடையில் ஏற முயற்சித்திருக்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த செருப்பு கழன்று விழுந்துள்ளது. அதனை எடுத்துக் கொண்டு திரும்ப எண்ணிய போது மின்சார ரயில் நடைமேடையை நோக்கி வந்துள்ளது.

’இப்போதான் மனசுக்கு இதமா இருக்கு’..!! ஓடிவந்த நபரை ஓங்கி அறைந்த போலீஸ்..!! பரபரப்பு காட்சி..!!

ரயில் வருவதை பார்த்து தண்டவாளத்துக்கு பக்கவாட்டில் இருக்கும் பாதையில் நிற்காமல் ரயில் அருகில் வரும் போது நடைமேடையில் ஏறியிருக்கிறார். இதனை கண்ட ரயில்வே போலீஸ் முதலில் அவரை வர வேண்டாம் என தடுத்தும் அந்த நபர் ரயிலை முந்திக் கொண்டு நடைமேடையில் வந்துள்ளார். அவரை கைத்தாங்கலாக பிடித்த ரயில்வே போலீஸ் நடைமேடையில் இழுத்து போட்டதும் அவர் கண்ணத்திலேயே பளார் என ஒரு அறை விட்டார். இந்த வீடியோ Gabbarsing என்ற ட்விட்டர் பக்கத்தில், “கடைசியில் விட்ட அறைதான் மனசுக்கு இதமாக இருந்தது” என கேப்ஷனிட்டு பகிரப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், “ஒருவேளை ரயில் ஓட்டுநருக்கும் அந்த வாய்ப்பு கிட்டியிருந்தார் அவர் ஒரு அறை விட்டிருப்பார்” என பதிவிட்டுள்ளனர்.

Chella

Next Post

இளம்பெண்ணை வழிமறித்து தாக்குதல் நடத்திய 4️ பேர் அதிரடி கைது…!

Wed Jan 18 , 2023
பெற்ற தாயாக இருந்தாலும் சரி, உடன் பிறந்த சகோதரியாக இருந்தாலும் சரி, அல்லது தான் பெற்ற மகளாக இருந்தாலும் சரி பெண்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை என்பது எப்போதும் இருக்க வேண்டும். ஆண் என்பவன் எப்போதும் பெண் குலத்திற்கு பாதுகாப்பாக தான் இருக்க வேண்டுமே தவிர, பெண்ணை அச்சுறுத்தும் ஒரு மிருகமாக இருக்கவே கூடாது. பெண்ணை விட ஆணை பலசாலியாக கடவுள் படைத்ததற்கு ஒரே காரணம் பெண் பூ போன்றவள், […]

You May Like