விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு தனக்கு எந்த பயமும் இல்லை என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு எந்த பயமும் இல்லை. விஜய் வந்தால் தான் மக்களுக்கு நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க சாய்ஸ் இருக்கும். சீமான், விஜய் வலிமை பெறவேண்டும், அப்போதுதான் அரசியலுக்கு நல்லது. தமிழகத்தில் 2026-ல் அரசியல் புரட்சி நிச்சயம் நடக்கும்.
பாஜக 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறது திருப்பூரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று துவங்கி நடக்க உள்ளது. செப்டம்பர் 2-ம் தேதி இங்கிலாந்து நாட்டில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் துவங்கும் வகுப்பில் பங்கேற்க உள்ளேன். நவம்பர் 2-வது வாரத்தில் வகுப்பு நிறைவு பெறும். பாஜகவில் கட்சி தலைவர் இல்லாத போதும் மற்றவர்கள் தலைவர் பணிகளை கவனிப்பார்கள். தற்போதைய கூட்டணி, கூட்டணி ஆட்சியை முன் வைத்து தான் கூட்டணி அமைத்தோம்.
2026ம் ஆண்டு தமிழகத்தில் நான்கு முனை போட்டி நடைபெறும். 2026ல் தமிழக அரசியல் களம் மாறும். தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, ராதாகிருஷ்ணன் என யாராக இருந்தாலும் 5 ஆண்டுக்கு ஒரு முறை வாக்கு சதவீதம் உயரவில்லை என்றால் கட்சியில் எங்காவது தவறு இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்மந்தமாக பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் பால் கனகராஜ் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தவறில்லை என்றார்.