fbpx

போலி வழக்கால் பாலியல் சுகத்தை இழந்தேன்..! 10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடிய இளைஞர்…!

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் கந்து. 35வயதான இந்த இளைஞர் கூட்டாளியுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு ரத்திலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கந்து , அவரின் நண்பர் மீதான குற்றங்களை அரசு தரப்பினால் நிரூபிக்க முடியாததால் இரண்டு வருட சிறை வாழ்க்கைக்கு பின்னர் இருவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த கந்து, தன் மீது போலி மற்றும் இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும். போலி குற்றச்சாட்டுகளால் தன் வாழ்க்கை பாழாகிவிட்டதாகவும், தொழில் மற்றும் வேலை இழப்பு, வாழ்க்கையில் முன்னேற்றம் இழப்பு ஆகிய 6 காரணங்களுக்காக தலா 1 கோடி ரூபாய் என மொத்தம் 6 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், போலி வழக்கால் 666 நாட்கள் சிறை சென்றதால் மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் இழந்ததற்காக மத்திய பிரதேச அரசு தனக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Kokila

Next Post

கர்நாடகா துறவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு : மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்...!

Thu Jan 5 , 2023
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பிரபல மடங்களில் ஒன்று முருக மடம். சித்ரதுர்காவில் இருக்கும் இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு. முருக மடத்தின் சார்பில் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் தங்கி படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு […]

You May Like