fbpx

“கடன அடைக்கதா இந்த படத்துடல நடிக்குறேன்” – நடிகர் சந்தானம் ஓபன் டாக்!

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ’இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம் இன்று வெளியாகிறது. அந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை கலாய்த்து ஹீரோவாக நடித்து வந்த சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்க வந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் அவரது கால்ஷீட்டுக்காக பல பிரபலங்கள் காத்திருந்த சூழல் ஏற்பட்டது. நாமே இனி ஹீரோவாக நடிக்கலாம் என முடிவெடுத்த சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமைய்யா, விவேக் பிரசன்னா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காமெடி படமான இங்க நான் தான் கிங்கு இன்று வெளியானது. அந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறுகையில்,  “எனக்கு நடிக்கிற வேலை இல்லையென்றால், பத்திரிக்கையாளர் பணிக்கு தான் வந்திருப்பேன். இந்த ஒரு வேலை தான் எப்போதும் பிஸியாக இருக்கிறது. கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணிட்டு போனீங்க. அதேமாதிரி இங்க நான் தான் கிங்கு படமும் சூப்பராகவும், ஜாலியாகவும் இருக்கும். கடன் வாங்கக்கூடாது என இந்த படத்தின் கதை இருக்கும். ஆனால் வாங்குன கடனுக்காகதான் இந்த படம் பண்ணியிருக்கேன். இந்த படத்தை எல்லாரும் பாருங்க” எனக் கேட்டுக்கொண்டார். நடிகர் சந்தானத்தின் இந்த வீடியோ இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது.

’நடிகையுடன் நெருக்கமாக நடிக்கும் ஜிவி’..!! ’நான் சொன்ன எதையும் அவரு கேட்கல’..!! சைந்தவி ஓபன் டாக்..!!

Next Post

’சினிமாவுல வாய்ப்பு வேணும்னா அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணனும்’..!! நடிகை தீபா பாலு ஓபன் டாக்..!!

Fri May 17 , 2024
சினிமாவில் நடிக்க அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் பழக்கம் அதிகரித்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர். அந்தவகையில், நடிகைகள் பலர் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய கேட்டார்கள் என்று வெளிப்படையாக பகிர்ந்தும் வருகின்றனர். அந்த வகையில், குறும்படங்கள், விளம்பரங்களில் நடித்து பிரபலமான நடிகை தீபா பாலு வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஹீரோயின் வாய்ப்புகள் வந்தால் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும் என்ற விஷயங்கள் இருக்கு. என்னோட தோழிகளுக்கு இந்த சம்பவம் […]

You May Like