ஐ டி பி ஐ வங்கியில் காலியாக உள்ள 600 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் பணிகளுக்காக 600 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருடம் வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகளில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் 17.2.2023 முதல் 28.2.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இதற்கு விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணமாக ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 200 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் நேர்காணல் மற்றும் அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளம் அரசு விதிமுறைகளின் படி வழங்கப்படும் என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் ஐ டி பி ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்ப படிவங்களை செலுத்த வேண்டும்.