தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், திமுகவுக்கு சவால் விடும் வகையில் ஆட்சியை பிடிக்க அதிமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆட்சிக்கு வந்தால் 5,000 ரூபாய் தருவோம் என ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் மூத்த தலைவர்க சி.வி. சண்முகம்.
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில்,
காலுக்கு செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தவர் ஜெயலலிதா. இப்போது ஏன் மாணவர்களுக்கு லேப்டாப் தரவில்லை என்ற நியாயமான காரணத்தை முதல்வரால் சொல்ல முடியுமா? தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் என்ன குறை கண்டுபிடித்தார் முதல்வர். ஏன் அந்த திட்டத்தை நிறுத்தினார். அதிமுக ஆட்சியில் 47 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கொடுத்தோம் ஆனால் இன்றைக்கு 17 லட்சம் பேருக்கு தான் வழங்கப்படுகிறது. மாதம் ஆயிரம் எல்லோருக்கும் கொடுப்போம் என கூறினார்கள் தமிழ்நாட்டில் இரண்டரை கோடி குடும்ப அட்டை உள்ளது இவற்றில் ஒரு கோடியே 4 லட்சம் பேருக்கு தான் கொடுக்கப்படுகிறது அதுவும் முழுசாக வழங்கப்படவில்லை.
தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாய் தருவோம் என கூறினோம், ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என கூறினோம் நான்கு சிலிண்டரை பயன்படுத்தியிருந்தாலும் இரண்டு சிலிண்டரை கள்ள சந்தையில் விற்டிருக்கலாம். தேர்தலின் போது திமுக கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு வருவார்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் அது உங்கள் பணம் ஆனால் ஓட்டை இரட்டை இலைக்கு போடுங்கள். அதிமுகவுக்கு வாக்களித்தால் ஆயிரம் என்ன 2500 கொடுப்போம், ஏன் ஐயாயிரம் ரூபாய் கூட கொடுப்போம். நம்பி ஓட்டு போடுங்கள் அதிமுக நன்மையே செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
Read more:சிவராத்திரி நிகழ்ச்சியில் மோதல்.. கடைகள் சூறையாடல்.. வாகங்களுக்கு தீ வைப்பு..!!