திருமண உறுதிமொழியின் அடிப்படையில், இருவரும் சம்மதித்து உடல் உறவு கொண்ட பின், சில காரணங்களால் திருமணத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், அதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்று ஒரிசா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு, அவரது தோழியான ஒரு பெண்ணால் முன்வைக்கப்பட்டுள்ளது. நல்லெண்ணத்தில் கொடுத்த அளித்து பின்னர் அதனை நிறைவேற்ற முடியாமல் போவதற்கும், திருமணம் செய்து கொள்வதற்காக திட்டமிட்டு அளிக்கப்படும் தவறான வாக்குறுதிக்கும் இடையே நுட்பமான வித்தியாசம் உள்ளது. நல்லெண்ண வாக்குறுதி மீறலில் அத்தகைய பாலியல் நெருக்கத்திற்காக, (பிரிவு 376 ஐபிசியின் கீழ்) அவ்வாறு செய்யவில்லை. ஆனால் திட்டமிட்டு அளிக்கப்படும் பொய் வாக்குறுதியில், திருமணத்தின் வாக்குறுதி தவறானது அல்லது போலியானது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஆலோசித்து, இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து உறுதியளித்து, பின் இருவரின் விருப்பத்தின் பேரில், உடல் ரீதியான உறவு கொண்டாலும், சில காரணங்களால் அது நடக்காமல் போனால், அந்த வாக்குறுதியை மீறியதாகக் கூறி அதை பாலியல் பலாத்காரம் என்று கூற முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“ஆரம்பத்தில் நட்பால் ஆரம்பித்து, உண்மையாக வளர்ந்திருந்தால், அது எப்போதும் அவநம்பிக்கையின் விளைபொருளாக முத்திரை குத்தப்படக்கூடாது. அதோடு அந்த ஆண் துணையின் மீது ஒருபோதும் கற்பழிப்பு குற்றம் சாட்டப்படக்கூடாது” என்று வழக்கு தொடர்பாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்