Amit Shah: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பத்து மாநிலங்களில் உள்ள 96 பாராளுமன்ற தொகுதிகளில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஆந்திர பிரதேசம் தெலுங்கானா மத்திய பிரதேசம் உத்திரப்பிரதேசம் இவ்வாறு உள்ளிட்ட தொகுதிகளில் வருகின்ற 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தத் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் அதிகமான பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் அனைத்து கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகள் முகாமிட்டு தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் வாழும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா(Amit Shah) காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் ராகுல் காந்தி பாகிஸ்தானின் அஜெண்டாவை இந்தியாவில் திணிக்க முயல்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் ரேபரேலி தூத்துக்குடியின் ராகுல் காந்தி தோற்கடிக்கப்பட்டால் அவர் தஞ்சம் அடைவதற்கு இத்தாலி மட்டும்தான் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அமித் ஷா இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்களது வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதற்காக ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்தனர் எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை பாபர் பூட்டை வைத்து மூடுவார்கள் எனவும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். மேலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் எனவும் அமித் ஷா கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.