fbpx

பிரேக் வேலை செய்யவில்லை எனில்.. காரை எப்படி நிறுவத்துவது..? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்…

சாலையில் சென்று கொண்டிருக்கும் கார் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? இது போன்ற நிலை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். கார் பிரேக் வேலை செய்யவில்லை எனில் என்ன செய்வது என்று தெரிந்த கார் டிரைவர்கள் மிக மிகக் குறைவு. பெரும்பாலான மக்கள் பதற்றமடைவார்கள், இதன் விளைவாக, மோசமான விபத்து நடக்கலாம். அதனால்தான், ஓடும் காரின் பிரேக் பழுதாகிவிட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்..

\

கார் திடீரென பிரேக் பிடிக்கவில்லையா? இனி இப்படி செய்யுங்கள்..!

பீதி அடைய வேண்டாம் : பிரேக் பழுதாகிவிட்டது என்று தெரிந்தவுடன் பலர் பீதியடைகின்றனர்.. அதைத் தவிர்க்க வேண்டும். பயப்படுவதால் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்.. எனவே நீங்கள் அமைதியாக இருப்பது உரிய வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது..

பார்க்கிங் விளக்குகள் அவசரகாலத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வாகனத்தின் பார்க்கிங் விளக்குகளை ஆன் செய்வதன் மூலம், பின்னால் வரும் வாகனத்தில் இருப்பவர்களுக்கு, உங்கள் வாகனத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம் என்று தெரிய வரும்.. இதனால், உங்கள் காரின் நிலையை உணர்ந்து கொண்டு சாலையில் இருப்பவர்கள் விலகிச் செல்வார்கள். இதனால் பெரும் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

கியரை மாற்றுதல் : பிரேக்குகள் வேலை செய்யவில்லை என்றால், கியரை மாற்றவும். வாகனத்தை உயரத்தில் இருந்து கீழ் கியருக்கு மாற்றும்போது வேகம் குறையும். தானியங்கி காரிலும் இதையே செய்ய வேண்டும். பெரும்பாலான தானியங்கி கார்களில் கையேடு அமைப்புகளும் வழங்கப்படுகின்றன. நீங்கள் கியர்களை ஒவ்வொன்றாக குறைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, கார் 5வது கியரில் இருந்தால், முதலில் அதை 4வது மற்றும் 3வது கியருக்கு மாற்றவும்.. எனினும் கியரை உடனடியாக 1 அல்லது 2 வது இடத்திற்கு மாற்றுவது இயந்திரத்தை சேதப்படுத்தும்.

கார் திடீரென பிரேக் பிடிக்கவில்லையா? இனி இப்படி செய்யுங்கள்..!

காரை ஓரமாக ஓட்டுங்கள் : பிரேக் பழுதடைந்தால், காரை நடுரோட்டில் வைக்காமல், உடனடியாக பக்கவாட்டில் திருப்பவும். நடுவில் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஹேண்ட்பிரேக்கைப் பயன்படுத்த வேண்டும். எனினும் பொறுமையாக ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருவேளை வேகமாக காரில் சென்று கொண்டிருக்கும் போது, ஹேண்டு பிரேக்கை பயன்படுத்தினால், அது ஆபத்தில் முடியக்கூடும். அப்போது, எஞ்சின் பிரேக்கை பயன்படுத்தி காரின் வேகத்தை 20 கி.மீ.க்குள் கொண்டுவந்துவிட்டால் ஹேண்டு பிரேக்கை போட்டு வாகனத்தை நிறுத்திவிடலாம். ஆனால், பின்பக்க சக்கரங்களுக்காக செயல்படக்கூடியது தான் ஹேண்டு பிரேக். கார் வேகத்தை குறைத்து ஹேண்டு பிரேக் போடும் போது, அது ஸ்கிட்டாகக் கூடும். அப்போது நீங்கள் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்குவது மிக மிக அவசியம். ஒருவேளை உங்களுடைய காரில் எலெக்ட்ரானிக் ஹேண்டு பிரேக் இருந்தால், இதுபோன்ற அவசர சமயங்களில் வாகனம் ஸ்கிட் ஆகாமல் பார்த்துக்கொள்ளும்.

Maha

Next Post

பெண்களே கவனிங்க.. தங்கம் விலை இன்று குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

Thu Aug 18 , 2022
சென்னையில் தங்கம் விலை ஒரு சசவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.38,704-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
gold

You May Like