fbpx

இவர்களுக்கு எல்லாம் கல்வி கட்டணம் கிடையாது…! மீறி வசூலித்தால் நடவடிக்கை…! அரசு அதிரடி…!

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உயர்கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை கூறியதாவது; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கல்வி மற்றும் தனி கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டு, ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பது அரசுக்கு தெரிய வந்தால் கல்லூரி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

Vignesh

Next Post

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 2,000 ரூபாய் நோட்டு...! முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு...!

Wed Jun 7 , 2023
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே 2,000 ரூபாய் நோட்டால் சமீபத்தில் வார்த்தை போர் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நிறுத்தியதை அடுத்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அதனை வங்கியில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் 278 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மத்திய, மாநில […]

You May Like