fbpx

“உலகில் மிக சிறந்த வாட்டர் ஃபில்டர்” மண்பானை பயன்கள் பற்றி தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..!

சில ஆண்டுகளுக்கு முன் நாம் அனைவரும் தண்ணீர் குடியிக்கிறோம் என்றால் செம்பில் அல்லது டம்ளர் தான் குடித்து வந்தோம்.ஆனால் இப்போது தண்ணீர் குடிக்க தனித்தனியாக பாட்டில் பயன்படுத்தி வருகின்றோம். நம் தாத்தா பாட்டிகள் அனைவரும் மண்பானை பயன்படுத்தி வந்தனர். அதில் பல நன்மைகளும் உள்ளன. இப்போது எந்த வீட்டிலும் மண்பானை பயன் பாட்டில் இல்லை.

இப்போது மண்களால் ஆன பொருட்களை வாங்க மக்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் பயன்களும் சிறப்புகளும் மக்கள் அறிந்து வருகின்றன. இதற்கு தொழில்நுட்பம் ஒரு வகையான காரணம் கூட. மன்பானைகள் பற்றி சில நல்ல விஷயங்களை இப்போது நாம் அறிவோம்.

மண்பானை சமையல்: நாம் தினமும் பானையில் சமைத்தால், ஆரோக்கியமான உடலை பெறலாம். பானையில் தயிர் ஊற்றி வைத்தால் நீண்ட நாள் புளிக்காமல் இருக்கின்றது. இதனை தினமும் குடித்து வந்தால் வயிற்று பிரச்சனைகள் குணமாகிறது.

மண்பானை குடிநீர்: பல ஆண்டுகள் முன் தாது நிறைந்த தண்ணீர் குடித்து வந்தோம் ஆனால் இப்போது அப்படி இல்லை. மண்பானை ஒரு நீர் சுத்திகரிக்கும் கருவி. மண்பானையில் தண்ணீர் ஊற்றி 2 முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால் கெட்ட பொருள்கள் அனைத்தையும் உறுஞ்சி கொள்ளும். இதனால் நாம் தாது நிறைந்த தண்ணீரை குடிக்கலாம். உலகில் மிக சிறந்த வாட்டர் ஃபில்டர்
மண்பானைதான். தினமும் மண்பானையில் சமையல் பாத்திரமாக பயன்படுத்தி வந்தால் நீண்ட ஆயுள் நமக்கு கிடக்கும் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

Maha

Next Post

பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு!… கட்டணம் எவ்வளவு தெரியுமா?…

Wed Aug 9 , 2023
தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் இன்றுமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அதனை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மறு கூட்டம் அல்லது […]

You May Like