நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. சூரிய பகவானின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏசி, கூலர், ஃபேன் எல்லாம் பழுதடைந்த மாதிரி இருக்கு. ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு வகையில் தங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க போராடுகிறார்கள். அதிகரித்து வரும் வெப்பத்தில் நோய்வாய்ப்படும் அபாயமும் உள்ளது, எனவே உங்கள் உடலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், நீரேற்றத்துடன், உணவில் கவனம் செலுத்துவதும் அவசியம். எனவே இந்த கோடையில் நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உப்பு நிறைந்த உணவகள்: உப்பும் காரமும் இருக்கிற உணவுகள் உங்கள் நாக்குக்கு ருசியாக இருக்கலாம். அது வயிற்றுக்கும் ஒட்டுமொத்த உடலுக்குமே கேடு. குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ், நாச்சோஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். குறிப்பாக வெயில் காலத்தில் சாப்பிடவே கூடாது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி: அசைவம் சாப்பிடுகிறவர்களாக இருந்தால் மீன், இறால் உள்ளிட்ட எந்த இறைச்சியாக இருந்தாலும் ஃபிரஷ்ஷாக வாங்கி சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட மற்றும் ஃபோரஷன் செய்யப்பட்ட இறைச்சியைத் தவிர்த்திடுங்கள். இறைச்சியை பதப்படுத்துவதற்கு அதில் அதிகமாக சோடியம் மற்றும் பிற ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இவை உடலில் உள்ள நீரை உறிஞ்சிவிடும்.
ஆல்கஹால்: வெயில் காலம் வந்துவிட்டால் ஜில்லுனு பியர் குடிக்க கிளம்பி விடுவார்கள். ஆனால் எந்த வகை ஆல்கஹாலாக இருந்தாலும் சரி, அது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். ஆல்கஹால் குடிக்கும்போது அதிலுள்ள டையூரிடிக் பண்புகள் உடலில் திரவ இழப்பை ஏற்படுத்தும்.
சர்ச்சரை உணவுகள்: அதிகமாக சர்க்கரை சேர்த்த உணவுகளை வெயில் காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும். எப்போதுமே இது நல்லதல்ல. வெயில் காலத்தில் இன்னும் மோசம். மிட்டாய், சாக்லெட், கேக் வகைகள் மற்றும் ஐஸ்க்ரீம் ஆகியவை கூடவே கூடாது. இவை ரத்த சர்க்கரை அளவை கிடுகிடுவென உயர்த்தும். அதுமட்டுமின்றி நீர்ச்சத்து குறைபாட்டையும் உண்டாக்கும்.
காஃபைன் உள்ள பானங்கள்: காபி, டீ, சோடா மற்றும் கார்பனேட்டட் பானங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவற்றில் காஃபைன் சேர்க்கப்பட்டு இருக்கும். இவற்றையும் தவிர்க்க வேண்டும். அதோடு அவற்றில் சர்க்கரையும் அதிகம். கலோரிகளும் எக்கச்சக்கம். சோடா மற்றும் காஃபைன் பானங்களிலும் ஆல்கஹாலுக்கு இணையாக டையூரிடிக் பண்புகள் இருக்கின்றன. இவை உடலில் மிகக் கடுமையாக நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கும்.
Read more: மாவட்ட சுகாதார துறையில் வேலைவாய்ப்பு.. ரூ.23,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?