fbpx

ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் இருந்தால் போதும்… தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது…?

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும். கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு நேற்று முதல் செயல்பட துவங்கியது. புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 18.11.2023-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Vignesh

Next Post

மாரடைப்பு முதல் புற்றுநோய் வரை: நைட் ஷிப்ட்டில் வேலை பார்க்கும் நபர்களுக்கு வரும் பிரச்சனைகள்…

Thu Oct 19 , 2023
தூக்கம் என்பது நமது வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒன்று. ஆனால் தூக்கத்தை பலர் அலட்சியமாக கருதுகிறார்கள் எனினும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இரவு தூக்கம் என்பது மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. நமது மூளையின் ஆரோக்கியம் முதல் உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் வரை தூக்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நல்ல இரவு தூக்கத்தை தொடர்ந்து பெற்று வரும் பொழுது நமது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்டிப்பாக […]

You May Like