பி.எட் படித்திருந்தால் இனி இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.
தமிழகத்தில் உள்ள ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளில் இரண்டு ஆண்டு கால அளவிலான இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயக் கல்வி அளிக்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் அதிக அளவில் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் இடைநிலை ஆசிரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் கல்வித்துறை அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. “பி.எட் படித்திருந்தால் இனி இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. இது தொடர்பாக அரசிதழில் மாற்றம் செய்து கல்வித்துறை அறிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்களில் ஜூன் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பணியில் இருந்தவர்களுக்கும், அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை சம்பளம் வித்தியாசமாக வழங்கப்பட்டதை எதிர்த்து கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.