சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் பணத்தைச் சேமிப்பதற்கும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தை வழங்குவதற்கும் ஊக்குவிப்பதற்காக பல்வேறு சேமிப்புத் திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இந்த பிரபலமான திட்டங்களைத் தவிர, முதலீட்டாளர்களுக்கு வழக்கமான வருமானத்தை அளிக்கக்கூடிய தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கு (Post Office Monthly Income Scheme Account- POMIS) திட்டமும் உள்ளது.
POMIS என்பது ஒரு நிலையான வட்டி விகிதத்தையும் முதலீட்டாளர்களுக்கு வழக்கமான வருமான ஆதாரத்தையும் வழங்கும் திட்டமாகும்.. குறைந்த ஆபத்துள்ள சேமிப்பு திட்டத்தை. ஒரு பெரியவர், மூன்று பெரியவர்கள் வரை கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்கள், மைனர் அல்லது மனநிலை சரியில்லாதவர் சார்பாக பாதுகாவலர் அல்லது பத்து வயதுக்கு மேற்பட்ட மைனர் அவர்களின் பெயரில் தபால் அலுவலகங்களில் இந்தக் கணக்கைத் திறக்கலாம்.
இந்த திட்டத்தின் தனிநபர் கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 1000 மற்றும் அதிகபட்ச ரூ. 9 லட்சம் வைப்புத்தொகையாக செலுத்தலாம்.. கூட்டுக் கணக்கிற்கான அதிகபட்ச வைப்புத்தொகை ரூ. 15 லட்சம்.. ஒற்றை அல்லது கூட்டுக் கணக்கில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்சத் தொகைக்கு உட்பட்டு, ஒரு நபர் இந்த அமைப்பின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம். இந்த திட்டத்தின் வட்டி வீதம் 7.4 சதவீதம் ஆகும்..
POMIS திட்டத்தில் ஒரு நபர் முதலீடு செய்தால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி கிடைக்கும்.. தபால் அலுவலகத்தில் உள்ள நிலையான சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி தானாகவே மாற்றப்படும். ஒருவேளை கணக்கு வைத்திருப்பவர் முதிர்வுக்கு முன் இறந்துவிட்டால், கணக்கு மூடப்பட்டு, நாமினி/சட்டப்பூர்வ வாரிசுகளுக்குத் தொகை திருப்பி அளிக்கப்படும். திருப்பிச் செலுத்தப்படும் முந்தைய மாதம் வரை வட்டி வழங்கப்படும்.