இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. ஸ்மார்ட் போன் இல்லாமல் வாழ முடியுமா என்றால் முடியாது என்பதே பதில்.. ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளதுடன், பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஸ்மார்ட்போன் ஆரோக்கியத்திற்கும் நிறைய தீங்கு விளைவிக்கும். ஆம்.. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், பல கடுமையான நோய்களுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் போனை பயன்படுத்தினால் உடல் நலம் கெடும் என்கின்றனர் மருத்துவர்கள். ஸ்மார்ட்ஃபோன் எப்படி உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது, அதனால் என்னென்ன நோய்கள் வரும் என்று பார்க்கலாம்..

கண் பிரச்சனை : டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையின் மூத்த கண் மருத்துவரான டாக்டர் ஏ.கே.குரோவர் கூறுகையில், ஸ்மார்ட் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் கண் வறட்சி பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்தார்.. இந்த பிரச்சனை குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது என்றும், போனில் இருந்து வெளிவரும் நீலக் கதிர்கள் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கூறினார்.. இதன் காரணமாக,, கண் வலி, கண் சிவத்தல் போன்ற பிரச்னைகள் காணப்படுகின்றன என்றும் பல குழந்தைகளுக்கு தலைவலியும் உள்ளது என்றும் கூறினார்.. மேலும் கொரோனா தொற்றுக்குப் பிறகு இதுபோன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளன என்றும், இதற்கு ஸ்மார்ட் போன் ஒரு பெரிய காரணம் என்றும் கூறினார்…
எலும்பு வலி : எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அகிலேஷ் குமார் “ ஸ்மார்போனை தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்துவதால் முடக்கு வாதம் ஏற்படும் இதற்குக் காரணம், மக்கள் மணிக்கணக்கில் கைகளில் போனை வைத்திருப்பதுதான். இதனால் மணிக்கட்டு மற்றும் முழங்கையில் வலி ஏற்படுகிறது. இந்த வலி தொடர்ந்தால், முடக்கு வாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சனை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் காணப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் போனை கையில் வைத்திருக்காதீர்கள்..” என்று தெரிவித்தார்..
மன ஆரோக்கியத்தில் பாதிப்பு : தேவையில்லாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள மூத்த மருத்துவர் டாக்டர் கமல்ஜித் சிங் கைந்த் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ மணிக்கணக்கில் போனை பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் போனை பயன்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அதிக நேரம் போனை பயன்படுத்துவது மனநலத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் போன் பயன்படுத்துவது மன ஆரோக்கியத்தை கெடுக்கும். இதனால், பதட்டம், மன உளைச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தூக்க முறை மோசமாகும் : போனைப் பயன்படுத்துவதால் தூக்கம் கெடும் என்கிறார் கண் மருத்துவரான டாக்டர் ஏ.கே.குரோவர். பல குழந்தைகள் தூக்க பிரச்சனையையும் எதிர்கொள்கின்றனர். இரவில் போனை உபயோகிப்பதால் தூக்கத்தின் நேரம் குறைகிறது, இது ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. தூக்கமின்மையால் தலைவலி, வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது ஓய்வு எடுப்பதும் மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமான வேலை ஏதேனும் இருந்தால், ஃபோனைப் பயன்படுத்தும் போது இடையிடையே இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்..” என்று தெரிவித்தார்..