நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் எளிய வழிகளில் ஒன்று நடைபயிற்சி. வாக்கிங் செல்வதற்கு சிறப்பு உபகரணங்களோ அல்லது ஜிம் செல்ல வேண்டும் என்றோ அவசியம் இல்லை.
உடல் ஆரோக்கியத்திற்கு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான-உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நடைபயிற்சியின் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மை கிடைக்கும். இருப்பினும், வாக்கிங் போகும் போது செய்யும் சில தவறுகள் ஆபத்தானதாக மாறலாம்.. வாக்கிங் செல்லும் போது செய்யும் பொதுவான தவறுகள் என்ன? அதனை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.
ஃபோனை தவிர்ப்பது நல்லது :
நடைபயிற்சி செல்லும் போது, உங்கள் ஃபோனைப் பயன்படுத்துவது அல்லது நடக்கும் போது வீடியோக்களைப் பார்ப்பது மிகவும் தவறான பழக்கங்களில் ஒன்று. இது உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்ற பற்றிய விழிப்புணர்வைக் குறைக்கலாம். சில நேரங்களில் விபத்து கூட நேரிடலம்.
2018 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, நடக்கும்போது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்துவது சமநிலையை கணிசமாகக் குறைக்கும் எனவும் ஒரு நபரின் நடைப்பயிற்சி முறையை மாற்றுகிறது என்றும் கண்டறிந்துள்ளது.
இது இறுதியில் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் வாக்கிங் போகும் போது கவனச்சிதறலை தவிர்த்து பாதுகாப்பை உறுதிசெய்வது அவசியம். நடைபயிற்சியின் பலன்களை அதிகப்படுத்த உங்கள் செல்போனை தவிர்ப்பது நல்லது.
முறையற்ற காலணிகளை அணிவது
வாக்கிங் போகும் போது சிலர் தவறான காலணிகளை அணிகின்றனர். இதனால் கொப்புளங்கள், கால் வலி மற்றும் நாள்பட்ட பிரச்சினைகள் கூட ஏற்படலாம். உங்கள் காலணிகளில் போதுமான வளைவு ஆதரவு அல்லது தாக்கத்தை உறிஞ்சுவதற்கு குஷனிங் இல்லை என்றால் உங்கள் மூட்டுகளில் வலி ஏற்படலாம். உங்கள் நடைபயிற்சி தேவைகளுக்கு ஏற்ப வசதியான, ஆதரவான காலணிகளை அணிவது அவசியம் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீரேற்றத்தை புறக்கணித்தல்
நடைபயிற்சி செய்யும் போது சில நேரங்களில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். குறிப்பாக வெயில் காலங்களில் அல்லது நீண்ட நேரம் நடக்கும் போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
உடலில் போதுமான தண்ணீர் இல்லை எனில் அது உடல் செயல்பாடுகளை எதிர்மறையாக பாதிக்கும். நீரேற்றம் இல்லாதது இரத்த ஓட்டத்தை குறைக்கும். இதனால் நீங்கள் நடைபயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.
எனவே நீங்கள் வாக்கிங் செல்வதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்கவும். நீரேற்றமாக இருக்க நீங்கள் எப்போதும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது நல்லது.
சரியான முறையில் நடக்காதது :
நடைபயிற்சி செய்யும் போது சாய்வாக நடப்பது செயல்திறனைக் குறைக்கும், தசைப்பிடிப்பு அல்லது சோர்வுக்கு வழிவகுக்கும். மேலும் மோசமான வடிவத்துடன் நடப்பதால் முதுகு வலி, முழங்கால் வலி ஆகியவை ஏற்படலாம்.
சில நேரங்களில் நடைபயிற்சி உங்கள் மூட்டுகள் மற்றும் தசைகளை நேரடியாக பாதிக்கிறது. தவறான முறையில் நடப்பது அசௌகரியத்தை மேலும் அதிகரிக்கூடும். உங்கள் நடைபயிற்சியின் செயல்திறனைக் கட்டுப்படுத்தலாம். தவறான தோரணையில் தொடர்ந்து நடப்பதால் கழுத்து அல்லது கீழ் முதுகில் அசௌகரியம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
எனவே எப்போதுமே நிமிர்ந்த தலையுடன், நேராக பார்த்து தோள்களை தளர்வாக வைத்து நடக்கவும். உங்கள் கைகளை பக்கவாட்டில் அசைத்து நடக்கவும்.
Read More : சாக்லேட் சாப்பிட்டு சர்க்கரை நோயை விரட்டுங்கள்!. அமெரிக்க ஆய்வில் வெளியான தகவல்!