fbpx

நீங்க அடிக்கடி வெளியூர் போவீங்களா அப்படினா இது உங்களுக்கான செய்திதான்…..! அதிரடியாக குறைந்த தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம்….!

தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் 1078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

அதன்படி தற்சமயம் பேருந்து கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது பயணத்திற்கான பயணச்சீட்டை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யும்போது திரும்பி வருவதற்கான பயண சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

இது ஒரு புறம் இருந்தாலும் பலரும் பேருந்து பயணத்தில் அலாதி பிரியம் கொண்டு இருப்பார்கள். அதாவது பலர் பேருந்தில் பயணம் செய்வதை அதிகம் விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள் அதிலும் நீண்ட தூர பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். என்ன தான் பேருந்தில் நீண்ட தூரம் பயணம் செய்தாலும், உடல் சோர்வு ஏற்பட்டாலும் கூட அவர்கள் அந்த பேருந்து பயணத்தில் அலாதி பிரியத்தை கொண்டு இருப்பார்கள்.

இந்த நிலையில், இந்த புதிய கட்டணம் செலவை திட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, இதுவரையில் 9,351 பேர் 10 சதவீதம் கட்டண சலுகை திட்டத்தின் கீழ் பயனடைய முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

இதற்கு முன்னதாக அரசு விரைவு பேருந்து கழகம் 50 சதவீதம் பயண கட்டண சலுகை நடைமுறைப்படுத்தி வருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது 10 சதவீதம் கட்டண சலுகையையும் அறிவித்திருக்கிறது.

Next Post

ஆண் நண்பருடன் நெருக்கம்..!! புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்..!!

Tue Jun 27 , 2023
தமிழ் சினிமாவில் ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகியவர் தான் மாளவிகா மோகனன். இதனைத் தொடர்ந்து கதாநாயகியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக அவர் சிலம்பம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்று இருக்கிறார். மேலும், தங்கலான் ரோலுக்காக அதிகம் நேரம் மேக்கப் போட்டு அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், […]
ஆண் நண்பருடன் நெருக்கம்..!! புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்..!!

You May Like