பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்.. இது ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டம் குறைந்தபட்ச தொகையை பிரீமியமாக செலுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான தொகையை உறுதி செய்கிறது.
இந்தியாவில் சாலை விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி 2020 முதல் 2021 வரை நாட்டில் விபத்துகள் 16.8 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 1,55,622 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர், 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் 4,03,116 சாலை விபத்துகளில் 3,71,884 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்தகைய சூழ்நிலையில், தேவைப்படும் நேரங்களில் உதவும் காப்பீட்டுத் தொகையை வைத்திருப்பது அவசியம். இருப்பினும், தனியார் காப்பீட்டுத் திட்டங்களின் விலையுயர்ந்த பிரீமியங்கள், வசதியற்ற குடும்பங்களுக்கு ஒரு பயங்கரமான சுமையாக இருக்கலாம். எனவே அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் அவர்களுக்கு உதவக்கூடும்..
இத்திட்டத்தின் கீழ், காப்பீடுதாரர் ஆண்டுக்கு ரூ.20 மட்டுமே டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் வரை காப்பீட்டு பலன்களைப் பெற முடியும். சாலை விபத்தில் காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்தால், நாமினிக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். ஊனமுற்றால், 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது..?
- திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஒருவர் ஜன் சுரக்ஷா யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில், படிவங்களுக்குச் சென்று, PMSBY படிவத்தைக் கிளிக் செய்யவும். அப்போது புதிய பக்கம் திறக்கும்.. அந்த புதிய பக்கத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் உரிமைகோரல் படிவத்தின் விருப்பங்களை காணலாம்..
- விண்ணப்பப் படிவத்திற்குச் சென்று உங்களுக்கு விருப்பமான மொழியில் பதிவிறக்கவும். பிரிண்ட் அவுட் எடுத்து உங்கள் சேமிப்பு வங்கி கணக்கு எண், மொபைல் எண், ஆதார் அட்டை எண், நாமினியின் பெயர் உள்ளிட்ட தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, உங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சமர்ப்பிக்கவும்.
எப்படி உரிமை கோருவது? காப்பீடு செய்தவரின் மரணத்தின் போது, அந்த நபரின் நாமினி வங்கி மற்றும் காப்பீட்டு அலுவலகத்திற்குச் சென்று கோரிக்கை படிவத்தை நிரப்ப வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட நபரின் இறப்புச் சான்றிதழை, காப்பீடு செய்த நபர் தனது சேமிப்புக் கணக்கை வைத்திருந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். செயல்முறை முடிந்ததும், காப்பீட்டுத் தொகை நாமினியின் கணக்கில் மாற்றப்படும்.