எல்.ஐ.சி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கலாம். அந்த வகையில் எல்.ஐ.சியில் ஜீவன் உமாங் பாலிசி என்ற சிறப்புத் திட்டம் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.. இதில், நீங்கள் முதலீடு செய்து குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெறலாம்.

பிறந்து 90 நாட்களே ஆன குழந்தை முதல், 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.. இது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமாகும்… இந்த திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு, வருடாந்திர நிலையான வருமானம் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். பாலிசிதாரரின் இறப்புக்கு பிறகு பாலிசிதாரரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நாமினிக்கு மொத்தத் தொகை செலுத்தப்படும்.
இந்த பாலிசியில் மாதாந்திர பிரீமியமாக ரூ.1302 (அதாவது ஒரு நாளைக்கு ரூ.44) செலுத்தினால், ஒரு வருடத்தில் ரூ.15,298 செலுத்த முடியும்.. எனவே 30 வருடங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், சுமார் ரூ.4.58 லட்சம் பணம் கிடைக்கும். 31வது வருடத்தில் இருந்து, உங்கள் முதலீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் ரூ.40,000 வருமானத்தை நிறுவனம் செலுத்தும் 31 முதல் 100 ஆண்டுகள் வரை ஆண்டு வருமானம் ரூ.40,000 ஆக இருந்தால், கிட்டத்தட்ட ரூ.27.60 லட்சத்தை நீங்கள் பெறலாம்..
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நபர் திடீரென மரணமடைந்தாலோ அல்லது அவருக்கு ஊனம் ஏற்பட்டாலோ, அதற்கான சிறப்பு நன்மையும் கிடைக்கும். 80C பிரிவின் கீழ் வரி விலக்கையும் இந்த திட்டத்தில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது..