மும்பை காவல்துறையினர் எச்சரிக்கை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 140 என்று தொடங்கும் மோபைல் எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அந்த அழைப்பை எடுக்காதீர்கள், அந்த அழைப்பை எடுத்து பேசினால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகும், எனவே எச்சரிக்கையாக இருங்கள், என்று காவல்துறையினர் கூறுகின்றனர். மும்பையில் உள்ள சாலையில் காவல்துறையினர் நின்ற படியும், ரோந்து வாகனங்களில் சென்ற படியும் இது பற்றி ஒலிபெருக்கியில் எச்சரிக்கை செய்கின்றனர். இதுபோலவே மகாராஷ்டிர காவல்துறை எச்சரிக்கை செய்ததாக வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு எச்சரிக்கை தகவல் பரப்பப்பட்டது.
ஒரு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் செய்த வித்தியாசமான விளம்பரத்தால் தான் இந்த பிரச்சனை ஆரம்பமானது. மேலும் மும்பைவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. 140-ல் தொடங்கும் ஒரு மோபைல்போன் எண்ணில் இருந்து பேசிய ஒருவர், ஒரு கொலையை அவர் நேரில் பார்த்ததாகவும், அந்த கொலையை தனது செல்போனில் படம் எடுத்ததாகவும், கொலையாளிகள் தன்னைப் பின்தொடர்ந்ததாகவும் கூறி இருக்கிறார். அடுத்தமுனையில் அவரது உரையாடலை கேட்ட அந்த நபர் அதிர்ச்சியடைரய, இது புதிய நிகழ்ச்சிக்கான விளம்பர அழைப்பு, என கூறியுள்ளனர். இதுபோல பலரை தொடர்புகொண்டு பேசி இருக்ஙின்றனர்.
அந்த விளம்பரதாரர் பேசியதை பதிவு செய்து காவல்துறையின் டுவிட்டர் மற்றும் ஹெல்ப்லைனில் பலரும் புகார் அளித்தனர். அதற்குபிறகே 140-ல் தொடங்கும் எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் யாரும் அந்த அழைப்பை எடுக்க வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தலை வழங்கி இருக்கின்றனர். இந்த தகவல் வேகமாக பரவியதால் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மையா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர். இதுபற்றி, மகாராஷ்டிர காவல்துறையின் சைபர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி விளக்கம் அளித்துள்ளார். ரோந்து காவல்துறையின் மொபைல் வேன்கள் தவறான எச்சரிக்கையை வெளியிட்டு விட்டதாகவும், 140-ல் தொடங்கும் எண்கள் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் எண்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், ஒருவர் அவரது வங்கிக் கணக்கு விவரங்கள், OTP, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எண்ணை பகிராத வரையில் எந்த பாதிப்பும் இருக்காது என்று சைபர் காவல் துறை தெரிவித்துள்ளது. மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்ததுள்ளது. எனவே, 140 என்று தொடங்கும் செல்போன் அழைப்பை எடுத்தால் வங்கி பணம் பறிபோகும் என்ற கூற்று தவரானது என்பது தெளிவாகிறது. இருப்பிலும் இந்த தகவல் மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பபட்டு வருகிறது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியது, தொலைபேசியில் பேசும் மோசடி கும்பல் வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு மோசடி செய்வது தொடர்ந்து வாடிக்கையாக உள்ளது. மேலும் இந்த கும்பல் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு நம்பர், ரகசிய நம்பர் ஆகியவற்றை வாங்கி பணத்தை திருடுகின்றனர். மும்பையில் 140 என்று தொடங்கும் போன் நம்பரை எடுத்ததும் வங்கி பணம் மோசடி செய்யப்படுவதாக தகவல் பரவிவருகிறது. சென்னையில் இன்னும் இந்த மாதிரி மோசடிகள் இதுவரை நடைபெறவில்லை. ஆனாலும் பொதுமக்கள் இது போன்ற அனாவிஷய அழைப்புகளை எடுக்காமல் கவனமாக இருப்பது நல்லது. என்று அவர் கூறினார்.