fbpx

குழந்தைகளுக்கான ஸ்பெஷல் திட்டம்.. மாதம் ரூ.1000 முதலீடு செய்து கோடிகளை அள்ளலாம்..!!

குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு NPS வாத்சல்யா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில், குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் விரிவுபடுத்தும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே, வாத்சல்யா திட்டமும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படும். எனவே இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்ய வேண்டும். அதைத் தாண்டி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். குழந்தை 18 வயதை அடையும் வரை பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் முதலீடு செய்ய வேண்டும். குழந்தையின் ஒப்புதலுடன் 18 ஆண்டுகள் முடிந்த பிறகும் இந்தத் திட்டத்தில் முதலீடுகளைத் தொடரலாம். அல்லது உங்கள் குழந்தையின் படிப்பு, வேலை, திருமணம் போன்றவற்றிற்காக வாத்சல்யா யோஜனாவில் செய்யப்படும் முதலீட்டில் 80 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம். 

60 வயது வரை வாத்சல்ய யோஜனாவில் தொடர்ந்து முதலீடு செய்தால், 10% வருமானத்தில் ரூ.2.75 கோடியைப் பெறலாம். இது குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கமான சேமிப்புப் பழக்கத்தையும் ஊக்குவிக்கிறது. குழந்தை 18 வயதை அடைந்த பிறகு, இந்தக் கணக்கு சாதாரண NPS கணக்காக மாற்றப்படும். பின்னர் 3 ஆண்டுகள் லாக்-இன் காலம் இருக்கும். அதன் பிறகு 25% தொகையை 3 முறை திரும்பப் பெறலாம்.

வாத்சல்ய யோஜனாவில் சேர இந்த ஆவணங்கள் தேவை. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ், தந்தை அல்லது தாய் அல்லது பாதுகாவலரின் ஐடி, பான், பாஸ்போர்ட் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். பாதுகாவலர் என்ஆர்ஐயாக இருந்தால் என்ஆர்இ/என்ஆர்ஓ வங்கிக் கணக்கு. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்க விரும்பினால், NPS வாத்சல்யா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வது ஒரு நல்ல படியாகும். 

Read more ; பெரியார் என்ன சமூக நீதி செய்யார்? விவாதத்திற்கு நான் தயார்..!! சவால் விட்ட சீமான்

English Summary

If you want to give crores of rupees to your children, include them in NPS Vatsalya Yojana

Next Post

மாமனாருடன் தனிமையில் உல்லாசம்.. நேரில் பார்த்த மாமியாரை தீர்த்து கட்டிய கள்ளக்காதல் ஜோடி..!!

Sun Jan 12 , 2025
உத்தரப் பிரதேசத்தில் மாமனார், மருமகளின் கள்ளத்தொடர்பை அறிந்த மாமியாரின் தலையில் செங்கல்லைத் தூக்கி போட்டு கொலை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கீதா தேவி (50). இவரது கணவர், குர்கு யாதவ் என்பவருக்கும், மருமகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மாமனாரும் மருமகளும் […]

You May Like