அரசுப் பேருந்துளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என பெண்கள் விரும்பும்பட்சத்தில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என போக்குவரத்த துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. எனவே தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனதும் முதல் 5 திட்டங்களில் அவர் கையெழுத்தில் பெண்களுக்கான இலவச பயணம் இருந்தது.
இந்நிலையில் , அமைச்சர் பொன்முடி இலவச பயணம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இலவச பேருந்தில் செல்லும் பெண்கள் சிலர் பணம் கொடுத்து டிக்கெட் கொடுக்க வேண்டும் என நடத்துனரிடம் வாக்குவாதம் செய்யும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்து துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அரசு பேருந்துகளில்இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பணம் செய்வேன் என விரும்பினார். பெண்கள் அவ்வாறே டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.
திட்டமிட்டு பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சியினர் செயல்படுவதாக கருதி பிரச்சனை வராமல் தடுக்க பெண்கள் விரும்பினால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. நடத்துநர்களுக்கும் இது தொடர்பாக வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.