fbpx

சினிமா வரலாற்றில் முதல் முறையாக.. ‘இசையமைப்பாளரே இல்லாமல் இளையராஜா பயோபிக்..’

இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் அறிவிக்கப்பட்டதில் இருந்து யார் இசையமைப்பாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வந்த நிலையில், அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக உலகம் எங்கும் வாழும் மனிதர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த பயோபிக் மூலம் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

படத்தின் ப்ரீ- புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்திற்கு யார் இசையமைப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், இளையராஜா பயோபிக்கிற்கென்று தனியாக இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமல் இளையராஜா இசையமைத்த இசையைப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால், படத்திற்கென்று தனி இசையமைப்பாளர் இல்லை என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

இசையமைப்பாளராக யாரையும் ஃபிக்ஸ் செய்யாமல் படம் முழுவதும் இதுவரை இளையராஜா இசையமைத்த பாடல்கள், பின்னணி இசை ஆகியவைகளை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒருவேளை இது நடக்கும்பட்சத்தில் இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகும் முதல் படம் இது என்ற பெயரை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ‘குழந்தை வேண்டாம்.. 20 வருஷத்தை இழக்க தயாரா இல்ல’ – வைரலாகும் நிகில் காமத் கருத்து!

Next Post

செந்தில் பாலாஜிக்கு வந்த புதிய சிக்கல்..!! உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை..!! மீண்டும் எப்போது..?

Thu May 16 , 2024
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்துக்கு வரும் 20 முதல் ஜூலை 8ஆம் தேதி வரை கோடைக்கால விடுமுறை என்பதால், விடுமுறைக்கு பிறகு ஜூலை 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு […]

You May Like