தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கின்ற கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி(32) இவர் ஒரு விவசாயி. இவருடைய மனைவி புனித ஆனி எப்சிபா(29) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு 2️ பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இப்படியான சூழ்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு அழகு சுந்தரபாண்டி வெளியில் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை வழிமறித்த 2 பேர் கொண்ட மர்மகும்பல் அரிவாளால் வெட்டி உள்ளது இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சங்கரலிங்கபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. அதாவது, அதே பகுதியைச் சேர்ந்த மாரி ராஜு என்பவருக்கும், சுந்தர பாண்டியன் மனைவி புனித ஆனி எப்சிபாவிற்கும் முறை தவறிய உறவு இருந்தது என்பது தெரிய வந்தது இந்த விவகாரத்தை அறிந்த சுந்தரபாண்டி மனைவியை கண்டித்து இருக்கிறார்.
இதன் காரணமாக, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட மனைவி முடிவு செய்து இருக்கிறார். அதன்படி மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினருக்கு பணம் வழங்கி கூலிப்படையை ஏவி விட்டு சுந்தரபாண்டியை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.