கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கின்ற குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயதான இளம்பெண் இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர் குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையின் காரணமாக, அந்த இளம் பெண் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒரு இளைஞருடன் அந்த இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது
இந்த பழக்கம் ஆட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையில் கள்ளக்காதலாக உருமாறி இருக்கிறது. ஆகவே அவ்வப்போது இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. கணவர் மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாத போது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நாளடைவில் அக்கம் பக்கத்திலிருந்து மூலமாக அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது இதனை தொடர்ந்து, தன்னுடைய மனைவியை அவர் கண்டித்திருக்கிறார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கணவரிடம் வேலைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு கள்ளக்காதலனுடன் அந்த இளம் பெண் ஓட்டம் பிடித்திருக்கிறார். வேலைக்கு சென்ற மனைவியை வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் பல்வேறு பகுதியில் தேடிப் பார்த்திருக்கிறார். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
ஆகவே இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் தன்னையும் தன்னுடைய குழந்தைகளையும் நிற்கதியாக விட்டுவிட்டு சென்ற மனைவியை மீட்டு தருமாறு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.