விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45) ,இவர் கட்டிட மேஸ்திரியாக இருந்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (41) இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளிட்ட 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தத்தைச் சேர்ந்த பரமசிவம் (50) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் முறை தவறி உறவாக மாறி, ராஜேஸ்வரியின் கணவர் வேலைக்கு சென்ற பிறகு பரமசிவமும், ராஜேஸ்வரியும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில், கடந்த சில தினங்களாக கள்ளக்காதலனுடன் ராஜேஸ்வரி பேசுவதை தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் கள்ளக்காதலர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜேஸ்வரியின் கணவர் முத்துப்பாண்டி வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில், வீட்டிற்கு வெளியே படுத்து உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரியை பரமசிவம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
வெளியூர் சென்று இருந்த ராஜேஸ்வரியின் கணவர் முத்துப்பாண்டி அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் திண்ணையில் மனைவி ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக இருக்கின்ற ராஜேஸ்வரியின் கள்ளக்காதலன் பரமசிவத்தை தேடி வருகின்றனர்.