பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் உள்ளே நுழையும் போதே காதல் புறாக்களாக எண்ட்ரி கொடுத்தவர்கள் தான் மணி – ரவீனா. இவர்கள் இருவரும் காதலிப்பது ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால், அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக சேர்ந்துகொண்டு கேம் விளையாடுவது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
கடந்த வாரம் கமல்ஹாசனே ரவீனாவின் இந்த செயலை கண்டித்திருந்தார். அதன் எதிரொலியாக இந்த வார எவிக்ஷனிலும் ரவீனா சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று அவர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததும் பாச மழை பொழிந்து வருகின்றனர். இதுவரை நிக்சன், சரவண விக்ரம், அர்ச்சனா, பூர்ணிமா, மணி, தினேஷ், விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்த நிலையில், இன்று ரவீனா வீட்டில் இருந்து வந்திருக்கிறார்கள்.
இதுவரை வந்த போட்டியாளர்களின் குடும்பத்தார் அனைவரும் போட்டியாளர்களிடம் பாசமாக நடந்துகொண்டனர். ஆனால், இன்று ரவீனாவின் அம்மா அவருக்கு செம்ம டோஸ் கொடுத்திருக்கிறார். குறிப்பாக மணியை அவர் காதலிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ரவீனாவுடன் தனியாக பேசும்போது “அறைஞ்சிருப்பேன், அவ்ளோ கோபம் வருது. எல்லார்கிட்டையும் அம்மா ஒத்துக்கிட்டாங்கனு சொல்ற. மணிக்காக நீ இங்க விளையாட வரல. இது நம்மளுக்கு தேவை கிடையாது” என ரவீனாவை வெளுத்துவாங்கி இருக்கிறார்.
இதையடுத்து மணி உடன் சென்று பேசும்போது, “தனியா உட்காருவதற்காகவா ரெண்டு பேரும் இந்த ஷோவுக்கு வந்தீங்க. தயவு செஞ்சு அவள நீங்க கூப்பிட்டு வச்சு பேசாதீங்க” என மணியிடமும் ஸ்டிரிக்ட் ஆக சொல்லி உள்ளார். இதன்மூலம் ரவீனாவின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.