fbpx

குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று தனது சொந்தங்களை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து போராடுபவர்கள் அநேகர். அந்த வகையில், ‘விஜயகாந்த் போல் இருக்கிறாய் என்று பலர் கூறியதால், நானும் நடிகன் ஆகியே தீருவேன் என சொந்த ஊரை விட்டுவிட்டு, சென்னைக்கு வந்தவர் தான் இமான் அண்ணாச்சி. ஆனால் பலரைப் போல், இவருக்கும் நடிகராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் தனது பொருளாதார சூழல் காரணமாக, அதிகம் கஷ்டப்பட்ட இவர் தள்ளுவண்டியில் காய் கறிகள் விற்று கொண்டே, சினிமாவிலும் முயற்சி செய்தார். 

இவரது விடா முயற்சியின் காரணமாக, இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான சென்னை காதல் மற்றும் வேட்டைக்காரன் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தார். பின்னர், பலரின் வரவேற்ப்பை பெற்ற கோலங்கள் சீரியலில் அன்வர் என்ற காதபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம், இவர் பலருக்கு மத்தியில் பிரபலமானார். இதனால், இவர் அதிகமான திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதிலும் குறிப்பாக அங்காடித்தெரு, பாணா காத்தாடி, கோ போன்ற படங்கள், இவரது நடிப்பு திறமையை உலகிற்கு எடுத்துக் காட்டி, தனி அடையாளத்தை பெற்று தந்தது.

பெரியவர்கள் மத்தியில் பெயர் பெற்ற இவர், குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சியின் மூலம் சிறுவர்கள் மத்தியிலும் பிரபலமானார். தொடர்ந்து, சின்னத்திரையில் சொல்லுங்க அண்ணே சொல்லுங்க போன்ற நிகழ்ச்சிகளில் இவர் செய்த அட்ராசிட்டி இவருக்கென்று தனி ரசிகர்களை உருவாக்கியது என்றே சொல்லலாம். இந்நிலையில், காமெடி நடிகராக வளம் வரும் இவர், தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க 20 முதல் 25 லட்சம் வரை சம்பளம் பெற்று வருகிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு பலரும் ஆதரவு அளித்தனர்.

இந்நிலையில், இமான் அண்ணாச்சி அவரது குடும்பத்தினருடன் விபத்தில் சிக்கி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இமான் அண்ணாச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சென்னையில் இருந்து நெல்லைக்கு இமான் அண்ணாச்சி தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில், இமான் அண்ணாச்சி சென்ற போது திடீரென்று மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதனால் கார் நிலை தடுமாறி, அந்த மாடு மீது மோது விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அதிர்ஷ்டவசமாக இமான் அண்ணாச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் பெரிதாக பாதிப்பின்றி உயிர் தப்பியுள்ளனர். இந்த தகவலை இமான் அண்ணாச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், மாடுகளால் நடக்கும் விபத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Read more: “அஜித்தை பார்த்துகிட்டே இருப்பேன்… திருமணதிற்கு பிறகு தான் அஜித் இப்படி மாறிட்டார்.” பிரபல நடிகை அளித்த சுவாரசிய தகவல்..

English Summary

imman annachi met with an accident with his family members

Next Post

அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக 4 பேர் நியமனம்..!! - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Tue Jan 28 , 2025
AIADMK general secretary Edappadi Palaniswami has ordered the appointment of four people as organizational secretaries.

You May Like