நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3-வது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், பிப் 2022ல் 3-வது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பியுள்ள நிலையில், ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், ’’தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகி வந்த சூழலில், 2017-ல் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. நீட் தேர்வு, மருத்துவப் படிப்பை ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக்கி விட்டது. அதனால்தான் நீட் தேர்வை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்த்து வருகிறோம். ஆனால், நமக்கு ஒத்துழைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
Read More : பயணிகளே நோட் பண்ணுங்க..!! ரயிலில் தூங்கும் நேரம் மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!