சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; அஞ்சலக சேவை – மக்கள் சேவை’ என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு சரக தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாமை நடத்த உள்ளார். இது சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடைபெறும். தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள 11,832 அஞ்சல் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் இதில் பங்கேற்கலாம்.
அஞ்சல் சேவைகளின் தரம், வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்துவது குறித்த தங்களது கருத்துகளை அஞ்சலக குறைதீர்ப்பு என்ற தலைப்புடன் உதவி இயக்குநர், சுந்தரேஸ்வரி, முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்ற முகவரிக்கு 22.05.2025 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்ப வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை அஞ்சலக குறைதீர்ப்பு (Dak Adalat) என்ற தலைப்புடன் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: பரபரப்பு..! வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்…! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!