fbpx

பனையூரில் தவெக மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை..!! ஷூட்டிங்கில் விஜய்..!! தலைமை வகிக்கும் புஸ்ஸி ஆனந்த்..!!

நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அக்டோபர் மாதம் விக்கிரவாண்டி வி.சாலையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்தினார். அந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்களே தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மாவட்ட தலைவர்களாக தொடர்ந்து வருகின்றனர். எனவே, கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் உத்தரவிட்ட நிலையில், நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில், தவெக மாவட்ட செயலாளர்களுடன் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பாளா்களை நியமிப்பது குறித்து வெள்ளிக்கிழமையான இன்று முக்கிய ஆலோசனையில் விஜய் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடைசிப் படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் சென்றுள்ளதால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு விஜய் ஒப்புதல் கிடைத்தவுடன், விரைவில் மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : ”மோசமான நிலையில் விஷால்”..!! ”சிங்கம் போல மீண்டு வருவான்”..!! உருக்கமாக பேசிய நடிகர் ஜெயம் ரவி..!!

English Summary

Vijay did not participate in the consultation meeting with party executives at the Thaveka office in Panayur.

Chella

Next Post

டீயுடன் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கா..? புற்றுநோய் முதல் மன அழுத்தம் வரை இத்தனை பிரச்சனைகள் வருமாம்..!! உஷாரா இருங்க...

Fri Jan 10 , 2025
Do you smoke cigarettes with tea? - But you need to know this! - Cigarette with Tea

You May Like