கடந்த 2011 க்கு முன்னர் திட்டமிடப்படாத மற்றும் மலைப்பகுதிகளில் கட்டப்பட்ட அனுமதி இல்லாத கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை வரன்முறைப்படுத்த ஆறு மாதம் கால அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 01.01.2011க்கு முன்னர் திட்டமிடப்படாத பகுதி மற்றும் மலையிட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான அனுமதியை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, 01.01.2011-க்கு முன்னர் திட்டமிடப்படாத பகுதி மற்றும் மலையிடப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் அனுமதியற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான அனுமதியை இறுதி வாய்ப்பாக ஆணை வெளியிடப்படும் நாளிலிருந்து மேலும் 6 மாத காலம் நீட்டித்து அரசு ஆணையிடுகிறது.
மேலும் மலையிடப்பகுதியில் (HACA) கட்டப்பட்டுள்ளப்பட்ட கல்வி நிறுவனங்களின் அனுமதியற்ற கட்டடங்களுக்கு திட்ட அனுமதி பெற அரசு வெளியிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.