தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை ஒரு சில இடை தரகர்கள் பயனாளர்களுக்கு சரியான முறையில் சென்று சேராமல் தடுத்து விடுகிறார்கள் என புகார் ஆங்காங்கே வந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், ரேஷன் கடைகளில் பொருட்களை பயனாளர்கள் வாங்காமல் இருக்கும்போது வாங்கி விட்டதாக கைப்பேசிக்கு எஸ் எம் எஸ் மூலமாக தகவல் வருவதாக புகார் எழுந்து வந்ததை தொடர்ந்து. இது குறித்து தமிழக அரசு தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து நியாய விலை கடைகளிலும் இதுகுறித்து ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு மாநில உணவுத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அத்துடன் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.