தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி மற்றும் பாடலை நடிகர் விஜய் இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்து வைக்கிறார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, தவெக தலைவர் விஜய், தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
கட்சிக்கொடி அறிமுக விழாவுக்கு 5,000 பேர் பங்கேற்பார்கள் எனக்கூறி காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு அனுமதி கோரியிருந்த நிலையில், 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுள்ளது. பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 9.15 மணிக்கு மேல் கட்சிக் கொடியை அறிமுகம் செய்வார் என்றும், தொடர்ந்து நிர்வாகிகள் இடையே 20 நிமிடம் உரையாற்றுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டரணி, மாணவரணி, மகளிர் அணி, இளைஞரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணி தலைவர்கள் என 300 பேர் மட்டுமே பங்கேற உள்ளனர். அவர்களுக்கு QR code அடங்கிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த QR code அடையாள அட்டை வைத்திருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : பச்சை மிளகாயை இப்படி செய்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!