fbpx

மகிழ்ச்சி செய்தி..! விவசாயத்திற்கு கூடுதலாக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்படும்…! தமிழக அரசு

விவசாயத்திற்கு கூடுதலாக மேட்டூர் அணையிலிருந்து இன்று ஒரு நாள் மட்டும் நீர் திறந்து விடப்படும்.

தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை பொழிவு குறைவாக பெய்த காரணத்தாலும், காவிரி நதி நீர் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக்கோரி விவசாய பெருமக்களிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் விவசாய பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து 2 TMC தண்ணீரை 03.02.2024 முதல் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்திரவிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 03.02.2024 அன்று 6000 கனஅடியும் 04.02.2024 முதல் 09.02.2024 வரை நாளொன்றுக்கு 5000 கனஅடி வீதமும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் போதுமான அளவு காவிரி டெல்டா பகுதியில் உள்ள பாசன நிலங்களுக்கு கடைமடை வரை செல்வதற்கு ஏதுவாக கால நீட்டிப்பு செய்யுமாறு விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய பெருமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயப் பெருமக்களின் நலன் கருதி பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூடுதலாக அதாவது 10.02.2024 வரை தண்ணீர் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அரச மரத்து இலைகளை வைத்து செய்யப்படும் கர்ம வினை தீர்க்கும் பரிகாரம்..! முழு விவரம்..!

Sat Feb 10 , 2024
நம் முந்தைய ஜென்மங்களில் செய்த பாவங்களும், நன்மைகளும் ஏழேழு ஜென்மங்களுக்கும் கர்மாவாக தொடர்ந்து நம்மை பின்பற்றி வரும். இதையேதான் கர்ம வினை என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னதான் பலருக்கும் பல நன்மைகள் தொடர்ந்து செய்து வந்தாலும் கெட்டது மட்டுமே நடக்கிறதா அப்படி என்றால் கர்மவினை பலனை அடைகிறீர்கள் என்று அர்த்தமாகும். மேலும் கர்ம வினைகளை நீக்கும் சக்தி கொண்டவர் விநாயகர். இவர் முன் ஜென்மங்களில் செய்த பாவங்களை நீக்கி […]

You May Like