fbpx

ஜெயம்ரவி எடுத்தது சரியான முடிவு.. ஆர்த்தி அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணுவாங்க..!! – பிரபலம் பகீர்

கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்று ஜெயம்ரவி – ஆர்த்தி விவாகரத்து செய்தி தான். விவாகரத்து செய்தியை அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியில், ஜெயம் ரவியின் விவாகரத்துக்கான காரணங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், முதலில் ஜெயம் ரவியின் வீட்டில் ஆர்த்தியை மருமகளாக ஏற்றுக்கொள்வதற்கு விருப்பமே இல்லை. ஆனால் ஜெயம் ரவியின் காதல், குஷ்பூவின் பேச்சுவார்த்தை எல்லாம் ரவியின் அப்பாவை மாற்றியது. இப்போது இரண்டு பேருக்கும் விவாகரத்து நடந்திருக்கிறது. இதனால் தனது மகனின் வாழ்க்கை போய்விட்டதே என்று ரவியின் அப்பாவும், அம்மாவும் நொந்து போயிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு ரவி மீது கொஞ்சம் அதிகமாகவே பாசம் இருக்கிறது.முக்கியமாக இத்தனை வருடங்கள் பாசத்தை கொட்டி வளர்த்த மகனின் வாழ்வு இப்படி போய்விட்டதே என்ற மனநிலையில் இருக்கிறார்கள்”என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ஆர்த்தி ஒரு பேட்டியில், நான் வாந்தி எடுக்கும்போது, அதை கையிலேயே பிடிச்சிக்கிட்டார், என்னை தாங்கு தாங்குன்னு தாங்கினார் என்றெல்லாம் சொல்லியிருந்தார். அதற்கு பிறகுதான் பிரச்சனை ஆரம்பித்தது. தன்னுடைய அம்மாவுக்கு ஒரு படம் நடித்து தருமாறு ஆர்த்தி கேட்டுள்ளார்.. இதற்கு ஜெயம் ரவியும் சம்மதிக்கவே, மொத்தம் 3 படம் தயாரிக்கப்பட்டுள்ளது.. இதில், “அடங்க மறு” என்ற படம் மட்டும் சுமாராக ஓடியது. மற்ற இரண்டுமே பிளாப் ஆகிவிட்டது.

அதனை அடிக்கடி குத்திக்காட்டி பேசி, அவரை கஷ்டப்படுத்தியிருக்கிறார்கள். இப்படி குத்திக்காட்டி பேசும்போது ஜெயம் ரவி மிகவும் நொந்துபோயிருக்கிறார்.. நடிப்பதற்கு பணமும் தராமல், வேலையை மட்டும் வாங்கிக்கிட்டு, கிண்டல் கேலி செய்தால் ஜெயம்ரவி மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளானார்.

ஆர்த்தி எப்போதுமே தன்னுடைய மாமனார் வீட்டுக்கு போக மாட்டாங்க.. அப்படியே போனாலும், கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்துடுவாங்க,. வழக்கமாக நடிகர், நடிகைகள் ஒருவருக்கொருவர் சந்தித்து கொண்டால், கை குலுக்குவது, ஹக் பண்ணுவது இயல்பான விஷயம்,. ஆனால், இதையும் சந்தேகப்பட்டுள்ளார் ஆர்த்தி. அதோடு, டச்சப் பாய், மேக்கப்மேன் இப்படி யாராவது ஒருவரை, ஜெயம் ரவி தங்கியிருந்த ஓட்டல் ரூமுக்குள் அனுப்பி உளவு பார்க்க சொல்வாரார். அந்த ரூமுக்குள் போயிட்டு வீடியோ எடுத்து தன்னுடைய செல்போனுக்கு ஆர்த்தி அனுப்ப சொல்வார் என பகிர்ந்துள்ளார்.

Read more ; 3 விஞ்ஞானிகளுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!! யார் அவர்கள்? கண்டுபிடிப்புகள் என்ன?

English Summary

In an interview with journalist Sabita Joseph, Jayam Ravi shared the reasons behind Aarti’s divorce.

Next Post

தனக்குத் தானே போதை ஊசி..!! திடீரென சுருண்டு விழுந்த வாலிபர்..!! மொட்டை மாடியில் கிடந்த திடுக்கிடும் பொருட்கள்..!!

Wed Oct 9 , 2024
It is said that Gauthamraj fainted when the drug was injected into his arm on the terrace.

You May Like