ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமர்நாத்(15) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார்.
அதேபோல அமர்நாத் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர் (21) இந்த நிலையில் தான் வெங்கடேஸ்வர் அமர்நாத்தின் சகோதரியை பின்தொடர்ந்து அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அறிந்து கொண்ட அமர்நாத் வெங்கடேஸ்வரை தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இந்த வாக்குவாதம் அதிகரித்ததால் ஆத்திரம் கொண்ட வெங்கடேஸ்வர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அமர்நாத் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார்.
இதன் காரணமாக, அமர்நாத்தின் உடலில் தீ பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் காப்பாற்றுமாறு கூச்சலிட்டதால் அந்த பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அமர்நாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அவசர உறுதியில் சென்று கொண்டிருந்த போது அமர்நாத் சில சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது வெங்கடேஸ்வர் உட்பட 3 பேரின் பெயர்களை தெரிவித்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமர்நாத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அதன் பேரில் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
அத்துடன் அமர்நாத்தின் சகோதரிக்கு தொந்தரவு வழங்கிய புகாரில் போக்சோ வழக்கையும் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.