fbpx

Gold Rate | தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்.. சாமானிய மக்கள் அதிர்ச்சி..! இன்றைய விலை என்ன?

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 63ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று (பிப்ரவரி 14) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,990-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.63,920-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியில் ரூ.1000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more : இந்தியாவின் முதல் சோலார் எலக்ட்ரிக் கார்.. வெறும் ரூ.3 லட்சம் தான் தொடக்க விலை..!! சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா..?

English Summary

In Chennai, the price of gold rose by Rs 10 to Rs 7,990 per gram today.

Next Post

நீரிழிவு நோய் முதல் உடல் எடை குறைப்பு வரை.. மேஜிக் செய்யும் பாப்கார்ன்..!! நம்பி சாப்பிடலாம்..

Fri Feb 14 , 2025
Popcorn: What happens if you eat popcorn every day?

You May Like