1,000 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் மட்டுமே இணையதள வசதிகளை பெற்றுள்ளன. மற்ற பள்ளிகளும் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் போர்டு மற்றும் கையடக்க கணினி போன்ற தொழில்நுட்ப ரீதியிலான வகுப்பறை கற்றலை மாணவர்களுக்கு வழங்க இணையதள வசதி அவசியமானது.
இதுவரை சுமார் 1,000 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் மட்டுமே இணையதள வசதிகளை பெற்றுள்ளன. மற்ற பள்ளிகளும் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இணையதள வசதிகளைப் பெறுவதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். இந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைந்து செய்தால் மக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகள் மீது பெரும் நம்பிக்கை வரும். இந்த 3 மாதத்திற்கான நமது உழைப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கான பெரிய மாற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.