தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றியிருக்கிறது. மொபைல் போன்களின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல், இன்னமும் பட்டன் போனை உபயோகப்படுத்துபவர்களும், போன் வந்தால் அதை அட்டெண்ட் செய்ய மட்டும் தெரிந்தவர்களும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள்கூட இலகுவாக மொபைல் போனை கையாள்கிறார்கள். இந்த வளர்ச்சியானது, வயதுக்கு மீறிக் காணக்கூடாத சில விஷயங்களைப் பார்க்க வைக்கிறது, அடிமையாக்க வைக்கிறது. உடல் நலத்தைத் தாண்டி, மனநலத்தை மொபைல் போன்கள் இன்றைய தலைமுறையிடத்தில் களவாடியிருக்கின்றன.
அந்தவகையில் குழந்தைகளை ஆபாச போதைக்கு தள்ளுவதில் குடும்ப சூழல்களின் தரமும் முக்கிய பங்கு வகிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு தேசிய மருத்துவ உளவியல் மாநாட்டில் ஒரு விவாதத்தின் போது இளம் பருவத்தினரின் மூளையில் ஆபாசத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்து நிபுணர்கள் ஆராய்ந்தனர். அப்போது, 13 வயது சிறுவர்கள்தான் அதிகளவில் ஆபாச படங்களை பார்ப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
SHUT கிளினிக்கின் மருத்துவ உளவியல் கூடுதல் பேராசிரியரும் ஆலோசகருமான டாக்டர் நிதின் ஆனந்த் கூறுகையில், அதிகப்படியான ஆபாச நுகர்வு மூளையின் டோபமைன் வெகுமதி அமைப்பை எவ்வாறு சீர்குலைக்கிறது என்பதை விளக்கினார். ஒருவருக்கு இன்ப மையமானது உயர்-தூண்டுதல் அனுபவங்களிலிருந்து திருப்தியைப் பெறுவதற்கு காரணமாகிறது என்றும் இறுதியில் ஒரே மாதிரியான தூண்டுதல்களிலிருந்து செறிவூட்டல் காரணமாக தனிமையில் இருப்பவர்களிடையே புதுமையை தேட தூண்டுகிறது என்றும் கூறினார்.
ஆபாச நுகர்வு பற்றிய பரவலான பிரச்சனை, விரிவான பாலியல் கல்வியின் பற்றாக்குறை மற்றும் இணைய அணுகலின் எளிமை ஆகியவற்றால் இத்தகைய நிலைமை ஏற்படுகிறது. மேலும், இந்த நிலைமையை போக்கவேண்டும் என்றால், பள்ளி பாடத்திட்டங்களில் பாலியல் கல்வி இணைக்கப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், வார இறுதியில் மட்டும் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேர் ஆபாச படம் பார்ப்பதாக கூறப்படுகிறது. அதாவது, இது பெரும்பாலும் தளர்வு மற்றும் மகிழ்ச்சிக்காகப் பார்ப்பதாக தெரிகிறது.
மேலும், உறவுகள் மற்றும் நெருக்கம் மீதான தாக்கமே ஆபாச படங்களை பார்க்கவும், இதனால் பிரச்சனைகள் ஏற்படவும் வழிவகுக்கிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள உறவுகளுக்குள் வெளிப்படையான மற்றும் நேர்மையான உரையாடல்கள் அவசியம் என்று மருத்துவர் ஷர்மா கூறினார்.