fbpx

TRB: மொத்தம் 21,543 பேர்… உடனே முந்துங்கள்…! தேர்வாணையம் மிக முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்று தேர்வில் 21,543 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022 எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதித் தேர்வு தாள் ஒன்று, கம்ப்யூட்டர் மூலம் அக்டோபர் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வினை 1,53,233 எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 7-ம் தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதில் 21,543 தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வர்களுக்கான விவரங்களை சரி பார்த்து அளிப்பதற்கும் அவகாசம் வழங்கியது. அதன் அடிப்படையில் தேர்வுகளில் மதிப்பெண் சான்றிதழ் பட்டியல் மற்றும் தகுதிச்சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நீரிழிவுநோய் உள்ளவர்கள் வெல்லம் சாப்பிடக்கூடாதா?

Fri Dec 23 , 2022
நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஒரு சுகாதார நிலை. நீரிழிவு நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகைகள் உள்ளன. இதை எளிமையாகச் சொல்வதானால், டைப் 1 நீரிழிவு என்பது இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தால் அழிக்கப்படுவதைக் குறிக்கிறது. மற்றும் டைப் 2 நீரிழிவு நோயில், உங்கள் கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை உங்கள் உடலால் […]

You May Like